சீசன் தொடங்கியாச்சு... மருத்துவ குணம் தர்பூசணியை மிஸ் பண்ணாம சாப்பிடுங்க!

தர்பூசணியில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு செயல்பாடு, செல் அமைப்பு மற்றும் காயம் குணப்படுத்துவதற்கு தேவையான கொலாஜனை உற்பத்தி செய்ய உதவுகிறது.

இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், எடை கூடும் என்று பயப்படத் தேவையில்லை. தர்பூசணி ஒரு எதிர்மறை கலோரி பழமாகும்.

தர்பூசணியில் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. லைகோபீன் (தர்பூசணியில் உள்ளது) கொழுப்பைக் குறைக்கவும், ரத்த அழுத்தத்தைப் பராமரிக்கவும் உதவும்

தர்பூசணியில் உள்ள லைகோபீன் பார்வை திறனுக்குச் சிறந்தது ஆகும்.

தர்பூசணிகளை சாப்பிடுவதால் ஈறுகளை வலுப்படுத்தி, ஈறு திசுக்களைப் பாக்டீரியா படையெடுப்பிலிருந்து பாதுகாக்கும்.