கொத்தவரையின் ஆரோக்கிய நன்மைகள் இவை

கொத்தவரங்காய் அல்லது கொத்தவரையில் வைட்டமின்கள், கால்ஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், இரும்பு, நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

நீரிழிவால் பாதிக்கப்பட்டோருக்கு இதமான உணவுகளில் இது ஒன்று.

உடல் எடை, கொழுப்பை குறைக்கும்; மலச்சிக்கலை போக்கும்.

இதிலுள்ள நார்ச்சத்து, ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அளவை குறைக்கும்.

உயர் ரத்த அழுத்தத்தை மட்டுப்படுத்தும். இதய சம்பந்தமான நோய்களை தடுக்க உதவும்.

போலிக் அமிலம் உள்ளதால், கர்ப்பிணிப் பெண்கள் உணவில் அதிகம் சேர்த்து கொள்ளலாம்.

கொத்தவரையிலுள்ள சத்துகள், மூளை மற்றும் நரம்புகளை அமைதிப்படுத்தும். மன அழுத்தத்தை குறைக்கும். இதை அளவோடு உண்பதே உடலுக்கு உகந்தது.