இயற்கை ரோஸ் மில்க் இது !

தேவையானப் பொருட்கள்: பால் - 1 லிட்டர், நாட்டு சர்க்கரை - 250 கிராம்.

பீட்ரூட் - 100 கிராம், பன்னீர் ரோஜா பூ - 3, ஏலக்காய் பொடி - தேவையான அளவு.

சுத்தம் செய்த பீட்ரூட்டை, தோல் நீக்கி துருவி சாறு பிழியவும்.

காய்ச்சிய பால் நன்கு ஆறிய பின், பீட்ரூட் சாறை கலக்கவும். இப்போது கண்களை கவரும் நிறம் வரக்கூடும்.

இந்த கலவையில், ரோஜா இதழ்களை 60 நிமிடம் ஊறவிடவும். பின், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் பொடியை கலக்கவும்.

இதை வடிகட்டி குளிரூட்டினால், இயற்கை ரோஸ் மில்க் ரெடி.

இது சுவையும் மணமும் நிறைந்தது; உடல் நலனை பாதுகாக்கும். குட்டீஸ்கள் விரும்பிச் சுவைப்பர்.

இதில் சிறிது சிறிதாக நறுக்கப்பட்ட நுங்கை கலக்கி குடித்தால் சுவை அள்ளும்.