குட்டீஸை கவரும் இனிப்பான மாம்பழ தோசை... ரெசிபி இதோ !
இது மாம்பழ சீசன். மாம்பழம் அனைவருக்கும் பிடித்தமானது. இதில் பல விதமான தின்பண்டங்கள் தயாரிக்கலாம்.
இவற்றில் மாம்பழ தோசையும் ஒன்று. இதை எப்படி செய்வது என, பார்க்கலாமா?
தேவையான பொருட்கள் : அரிசி - 1 கப், மாம்பழ சாறு - 1 கப், வெல்லம் - 2 ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, நெய் - 2 ஸ்பூன்
செய்முறை : முதலில் அரிசியை கழுவி, இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
அதன்பின் அரிசியை மிக்சியில் போட்டு, அதில் மாம்பழ சாறு, வெல்லம், உப்பு போட்டு, தோசை மாவு பதத்துக்கு அரைக்கவும்.
அதன்பின் அடுப்பில் தோசைக்கல் வைத்து, சூடானதும் நெய் தடவி அதன் மீது மாவை ஊற்றி தோசை வார்க்கவும்.
மிதமான தீயில் வைத்து, இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை வேக வைத்தால், சுவையான மாம்பழ தோசை ரெடி.
பெரியவர் முதல், குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடுவர். தேங்காய் சட்னி அல்லது தக்காளி சாஸ் பொருத்தமாக இருக்கும்.