உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய மூன்று !

கலப்பு கார்போஹைட்ரேட்கள்... இவை நீண்ட நேரம் உங்களை நிறைவாக உணரச் செய்யும்.

பிரவுன் அரிசி, ஸ்டார்ச் நிறைந்த காய்கறிகள், குயினோவா, சிறு தானியங்கள், வள்ளிக்கிழங்கு, பீட்ரூட் போன்றவற்றில் இவை அதிகமுள்ளன.

இலகு புரதங்கள்... நிறைவுற்ற கொழுப்பு இதில் குறைவாக இருக்கும். இந்த வகை புரதங்கள் விரைவாக சிந்திக்கவும், செயல்படவும் ஆற்றலை அளிக்கும்.

முட்டை, கோழி இறைச்சி, சோயா பீன்ஸ், குறைந்த கொழுப்பு உள்ள பால், சால்மன் மீன் என பலவற்றில் இலகு புரதம் உள்ளது.

கொழுப்பு அமிலங்கள்... மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் சரியான செயல்பாட்டுக்கு இவை முக்கியமானவை.

மீன், இறைச்சி, முட்டை, நட்ஸ் மற்றும் ஆளி விதைகளில் இவை உள்ளன.