குளிர்காலத்தில் உதடு வெடிப்புகளை குணப்படுத்த எளிய வீட்டு வைத்தியம்

உதடு வெடிப்புகளுக்கு எளிய மற்றும் பயனுள்ள தீர்வுகளில் ஒன்றாக உள்ளது பெட்ரோலியம் ஜெல்லி. இது உதடுகளை மேலும் சேதத்திலிருந்து பாதுகாப்பதுடன், ஈரப்பதத்துடன் இருக்கவும் உதவுகிறது.

தேனில் உள்ள ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் தொற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. எனவே, உதடுகளில் சிறிதளவு சுத்தமான தேனைத் தடவி, ஒருசில நிமிடங்கள் உலரவிட்டு பின்னர் துடைக்கலாம்.

இயற்கை மாய்ஸ்சரைசரான தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் சருமத்துக்கு ஊட்டமளிப்பதுடன், ஈரப்பதமாக்கவும் உதவுகிறது. எனவே, தேனை போன்றே உதடுகளில் இதை தடவலாம்.

இயற்கையான தாவரமான கற்றாழையில் இனிமையான மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகள் நிறைந்துள்ளன. எனவே, உதடுகள், முகம் என சருமத்துக்கு நேரடியாகப் பயன்படுத்தலாம்.

துவர்ப்புப் பொருளான எலுமிச்சை சருமத்தை இறுக்கி, பளபளப்பாக்க உதவுகிறது. ஒரு சில துளிகள் எலுமிச்சை சாற்றுடன் சிறிதளவு தேன் கலந்து உதடுகளில் தடவி, சில நிமிடங்கள் உலரவிட்டு கழுவி விடவும்.

இதுதவிர அதிகளவில் தண்ணீர் குடிப்பதன் மூலம், சருமத்தை நீரேற்றமாக வைக்கலாம். உதடுகளை அடிக்கடி நாக்கினால் நக்கி ஈரப்பதமாக்குவதையும் தவிர்க்க வேண்டும்.

உதடு தைலம் அல்லது மாய்ஸ்சரைசிங் க்ரீம் பயன்படுத்தும் போது உதடுகளில் வெடிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.