முதுகு வலிக்கும் உணவு பழக்கதிற்கும் தொடர்பு உண்டா?

பொதுவாக முதுகு வலி நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், நீண்ட தூரம் பயணிப்பவர்கள் போன்றவர்களுக்கு ஏறபடும். நம்முடைய தினசரி உணவு முறையால் கூட முதுகு வலி பிரச்னை ஏற்படலாம்.

உதாரணமாக, முதுகு வலிக்கு காரணமாக உள்ள உணவுப்பொருட்கள் என்று பார்த்தால் பருப்பு வகைகள் இதை உணவில் அதிகமாக சேர்ந்த்துகொண்டால் முதுகு வலி ஏற்படக்கூடும்.

அதுமட்டுமல்லாமல், உடம்பில் இருந்து வெளியேறக்கூடிய காற்று, தும்மல், ஏப்பம், சிறுநீர், மலம், ஆகியவைகளை அவ்வபோது வெளியேற்றாமல் அடக்குவதன் மூலமாகவும் முதுகு வலி ஏற்படலாம்.

முதுகு வலியை உடற்பயிற்சியாலும், சரி செய்ய இயலும். இடுப்பு, கை, கால்களை மெதுவாக நீட்டி மடக்குதல், நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சி மூலம் உடல் வலுவடைத்து, இறுக்கமாவது தடுக்கப்படுகிறது.

கடினமான மற்றும் முடிச்சு ஏற்பட்ட முதுகுத் தசைகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வர மசாஜ் செய்யவும்.

கீழ் முதுகு வலியால் அவதிப்படும்போது மல்லாந்து படுப்பதில் ஒருவித அசௌகரியம் ஏற்படுவதால் முழங்காலை சற்று மடக்கி, தலையணை வைத்து ஒருபக்கமாக சரிந்துபடுக்கவும்.

போதுமான கால்சியம், பாஸ்பரஸ் சத்துள்ள உணகள், மீன், இறைச்சி, பால் பொருட்கள், கோதுமை, பார்லி, சோளம் போன்ற தானியங்கள் அதிகம் எடுத்துக்கொள்ளவும்.