முட்டிக் கொள்ளும் குட்டீஸை எப்படி சமாளிப்பது… இப்போ பார்க்கலாம்!

ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால் அடிக்கடி சண்டை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. பெற்றோர்கள் எப்பவுமே அங்கு ரெபரிதான்.

வீட்டில் துவங்கி, பள்ளிக்கூடம், மால் என அவர்கள் சண்டை போடுவது பெற்றோர்களின் தலையை சுற்ற வைத்து விடும்.

குழந்தைகளின் உலகம் உணர்ச்சிகள் நிரம்பியது. கோவம், அழுகை போன்ற உணர்ச்சிகளை அடக்கி வைக்க அவர்களால் முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே எதற்காக சண்டை வந்தது என்பதற்கான காரணத்தை முதலில் நீங்கள் அடையாளம் காண வேண்டும்.

ஒரு குழந்தையை பற்றி இன்னொரு குழந்தையிடம் குறை சொல்லாதீர்கள். இருவரிடமும் சண்டைக்கான காரணத்தை கேட்க மறக்காதீர்கள்.

குறைகளோடு தங்கள் உடன்பிறப்பை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளருங்கள்.

அதே மாதிரி பெற்றோர்கள் இருவரும் குழந்தைகளுக்கு முன்பு சண்டை போடாதீர்கள். அவர்கள் உங்களை அப்படியே பின்பற்றுவார்கள்.

வீட்டு பெரியவர்கள் சொல்வதையும் அவர்கள் சொல்லும் கருத்துகளையும் நியதியையும் ஏற்றுகொள்ள குழந்தைகளை ஆரம்ப காலத்திலே பழக்கப்படுத்த வேண்டும்.

கதைகள் மூலம் குழந்தைக்கு நற்பண்புகளை வளர்ப்பது எளிது. அன்றாடம் நீதி கதைகளை சொல்லி தருவது நல்லது.