கருமையான உதடுகள் அழகாக மாற இதையெல்லாம் ட்ரை பண்ணலாம்

சிறிது எலுமிச்சை சாற்றை உங்கள் உதடுகளில் தடவி, சுமார் 15 நிமிடங்கள் விட்டு, தண்ணீரில் கழுவினால் உதட்டில் உள்ள கருமை நீங்கும்.

சிறிது வெள்ளைச் சர்க்கரையை ஆலிவ் எண்ணெய் அல்லது தேனுடன் கலக்கவும். இதை உங்கள் உதடுகளில் சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்து பின் துடைத்தால், உதட்டில் கருமையை ஏற்படுத்தும் இறந்த சரும செல்களை அகற்ற உதவும்.

படுக்கைக்குச் செல்வதற்கு முன் சிறிது பீட்ரூட் சாற்றை உதடுகளில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். காலையில் கழுவினால் கருமை மாறும்.

ஒரு வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கி, உதடுகளில் சில நிமிடங்கள் தேய்க்கவும். பின்னர் 10நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவினால் கருமை மாறும்.

படுக்கைக்குச் செல்வதற்கு முன் சிறிது பாதாம் எண்ணெயை உதடுகளில் தடவி இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும். பின்னர் காலையில் எழுந்து தண்ணீரில் கழுவினால் உதட்டின் கருமை மாறுவதோடு, உதடு ஈரத்தன்மையுடன் இருக்கும்.

உதட்டில் உள்ள நிறமியின் தீவிரத்தைப் பொறுத்து முடிவுகள் மாறுபடலாம். இந்த வைத்தியம் முடிவுகளைக் காட்ட நேரம் எடுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.