பேரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

நார், வைட்டமின் - சி, கே மற்றும் பொட்டாஷியம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் பேரிக்காயில் நிறைந்துள்ளன.

நடுத்தர அளவிலான, 180 கிராம் எடையுள்ள பேரிக்காயை உண்டால், 100 கலோரிகள் கிடைக்கும்.

இது செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கும். தோலுடன் சாப்பிடுவதால் அதிக நன்மைகள் கிடைக்கும்.

இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்.

பேரிக்காயில் உள்ள பொட்டாஷியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்; இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இது நீரிழிவால் பாதிக்கப்பட்டோருக்கு உகந்த உணவாக உள்ளது.

குழந்தைகளுக்கு, பேரிக்காயை கொடுத்து வந்தால், அவர்களின் எலும்புகள் நல்ல முறையில் வளர்வதுடன், வலுவடையும்.

இதிலுள்ள சுண்ணாம்பு சத்து எலும்புகளுக்கு உறுதி அளிப்பதுடன், பற்களை பலப்படுத்துகிறது.