பற்கள், தாடைகளின் பாதுகாப்பிற்கு மவுத் கார்டு!
விளையாட்டுப் பயிற்சிகள், போட்டிகளின் போது, கை, கால்களில் அடிபடுவதை விடவும் முகத்தில் அதிலும் குறிப்பாக தாடையில் அடிபடுவது தான் அதிகம்.
சிலருக்கு மேல் வரிசை பற்கள் சற்று துாக்கலாக இருக்கும். இவர்களுக்கு முகத்தில் அடிபடும் போது, பல் உடையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
விபத்து உள்ளிட்டவற்றால் பற்கள் அடிபடும் போது அதைச் சுற்றயுள்ள தசைகள், நரம்புகள், எலும்புகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு, தலைவலி உட்பட பல பிரச்னைகள் வருகின்றன.
விளையாடும் போது, முகம், வாய், தாடைப் பகுதி அடிபடாமல் இருக்க, கிரிக்கெட் வீரர்கள் ஹெல்மெட், கால்பந்து வீரர்கள் மவுத் கார்டு (Mouth Guard) போடுவார்கள்.
இது போன்று, குழந்தைகளை விளையாட்டுப் பயிற்சிக்கு அனுப்பும் போது, அந்தந்த விளையாட்டுக்கு தகுந்த பாதுகாப்பு கவசத்தை அணியப் பழக்கலாம் என பல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தற்காலிகமாக வாங்கி பயன்படுத்தாமல், டாக்டரின் ஆலோசனையை கேட்டு, அவரவரின் முக அமைப்பை அளவெடுத்து, மட்டுமே போட்டால் பாதுகாப்பாக இருக்கும்.