மாதவிடாய் வலியால் அவதிப்படுகிறீர்களா? ஆயுர்வேதம் மூலம் ஆற்றுப்படுத்தலாம்
ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நேரத்தில் பலருக்கு அதிக வலி ஏற்பட்டு தினசரி பணிகளையே முடக்கும். குறிப்பாக பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் கடுமையான வலி ஏற்படும்.
மாதவிடாய் நேரத்தில் பிசிஓஎஸ் மூலம் ஏற்படும் வலியை குறைக்க சில எளிய வீட்டு வைத்தியங்கள்.
நெல்லிக்காய் நச்சுகளை வெளியேற்றி, மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்துகிறது.பிசிஓஎஸ் காரணிகளான உடல் எடையை குறைக்கவும், தேவையற்ற முடி வளர்ச்சியை தடுப்பகவும் செய்கிறது.
ஆளி விதையில் ஒமேகா -3 மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. பிசிஓஎஸ் மூலம் ஏற்படும் பக்க விளைவுகள் கட்டுப்படுத்த இவை பெரிதும் உதவுகின்றன.
ஆளி விதை உடலில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கும், கருவுறுதலை ஊக்குவிப்பதற்கும், மாதவிடாயை ஒழுங்குபடுத்துவதற்கும் லிக்னன் எனப்படும் ஆக்ஸிஜனேற்றத்தை உடலுக்கு வழங்குகிறது.
வெந்தயம் நீர்க்கட்டியின் அளவை குறைக்கவும், பிசிஓஎஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் வலியை குறைக்கவும் உதவுகிறது. ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை 5 - 6 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுங்கள்.
தேன் மற்றும் எலுமிச்சை சாறு வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. எலுமிச்சை நீருடன் தேன் கலந்து குடித்தால் பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் வலியை குறைக்க உதவும்.
துளசி தேநீர் ஆண்ட்ரோஜன்களைக் கட்டுப்படுத்தும் போது இன்சுலின் அளவை ஒழுங்குபடுத்துகிறது. இது பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு முகத்தில் முடி, முகப்பரு வராமல் தடுக்கிறது.