பெண் குழந்தைகளை அச்சுறுத்தும் தைராய்டு கோளாறு!

தமிழகம்,கேரளாவில் 19 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள், தைராய்டு கோளாறால் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

முப்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு எற்படும் இப்பிரச்னை தற்போது குழந்தைகளை, குறிப்பாக பெண் குழந்தைகளை பாதித்திருப்பது அதிர்ச்சியான விஷயமாக உள்ளது.

ஹைப்போ தைராய்டிசம் எனப்படும், தைராய்டு சுரப்பி சீராக செயல்படாத தன்மையை ஆரம்பத்திலேயே கண்டறிவதால், பல உடல் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

இதனால், பள்ளியிலேயே இந்த பரிசோதனையை கட்டாயப்படுத்த வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சோர்வு, கவனமின்மை, உடல் எடை அதிகரிப்பு, சீரற்ற மாதவிடாய், வயதிற்கேற்ற வளர்ச்சியின்மை, போன்ற அறிகுறிகள் குழந்தைகளிடம் காணப்படும்.

முடி உதிர்வது, எடைக்குறைவு, தோல் வறட்சி, சோர்வு போன்ற அறிகுறிகள் தெரிந்தால், அந்த வயதில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களைத் தாண்டி, தைராய்டு கோளாறாகவும் இருக்கலாம்.

ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், முறையான மருத்துவ ஆலோசனையுடன் எளிதாக இதை நிர்வகிக்க முடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.