உயிர் காக்க முக்கியமானது நேரம் !
மாரடைப்பு, பக்கவாதம், தீக்காயம், விஷம் அருந்துதல், விபத்து பாதிப்புகளுக்கு முதல் ஆறு மணி நேரத்துக்குள் சிகிச்சை பெறுவது அவசியம்.
தவறினால், உயிரிழப்போ அல்லது பழைய நிலைக்கு திரும்ப முடியாத சூழலோ ஏற்படலாம்.
குறிப்பாக பக்கவாதம், மாரடைப்பு, நுரையீரல் ரத்த அடைப்பு ஆகிய பாதிப்புகளில், ரத்தம் உறைந்து கட்டியாகி விடும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த ரத்த கட்டிகளை கரைக்க, 'த்ரோம்போலிடிக்' மருந்துகள் செலுத்த வேண்டும். அவை, ரத்த ஓட்டத்தை சீராக்குவதால், பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரலாம்.
இந்த மருந்துகளை, பாதிப்பு ஏற்பட்ட முதல் ஆறு மணி நேரத்திற்குள் செலுத்த வேண்டும். இதிலும் பக்கவாதம் ஏற்பட்டால், முதல் மூன்றரை மணிக்குள் செலுத்த வேண்டும்.
சிலருக்கு, பக்கவாதம் ஏற்பட்ட சில மணி நேரங்களில், தலையில் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு வலிப்பு ஏற்படலாம். சுயநினைவு போய் விட வாய்ப்புள்ளது.
எனவே, அனைத்து பாதிப்புகளுக்கும், உயிரிழப்பை தடுக்க, நவீன மருத்துவ முறைகள் வந்துவிட்ட நிலையில், உயிர் காக்க நேரம் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.