கோடையில் உடற்பயிற்சி செய்யலாமா? இதோ சில டிப்ஸ்! !
அதிகாலை அல்லது சூரியன் மறைந்த பிறகு உடற்பயிற்சி செய்யுங்கள். காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை உடற்பயிற்சிகளைச் செய்யாமல் இருப்பது நல்லது.
அதிகாலையில், வெறும் வயிற்றில் இந்த எளிய பயிற்சிகளை செய்யலாம். ஏனெனில் காலையில் தான் அதிக கலோரிகள் தொடர்ந்து எரிக்க முடியும்.
வாரத்தில், ஐந்து - ஆறு நாட்கள் தினமும், 30 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடக்கலாம். மாலை நேரத்தில் நீச்சல், சைக்கிளோட்டுதல் நுரையீரல் மற்றும் இதயத்தசைகளை வலுவடையச் செய்யும்.
உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன் அல்லது திட உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து, உடற்பயிற்சி செய்வது நல்லது. சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக குறைந்தது 2 டம்ளா் தண்ணீா் குடிப்பது நல்லது. இடையில் சிறிதளவு தண்ணீா் குடிக்கலாம்.
காலை 8 மணிக்கு பிறகு நீங்கள் வீட்டிற்குள் உடற்பயிற்சிகளைச் செய்வது நல்லது. வெயிலில் வெளியே செல்வது சோர்வு, மயக்கம், நீர்சத்து குறைபாடு ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும்
தலைவலி, மயக்கம் , தசைப்பிடிப்பு அல்லது வாந்தி ஏற்பட்டால், உடனே உடற்பயிற்சி செய்வதை நிறுத்த வேண்டும்.
கோடையில் அந்தந்த வயதிற்கு ஏற்ற, பொதுவான சில உடற்பயிற்சிகளை அனைவரும் செய்யலாம். ஆனாலும் வயது, உடல் எடை, தேவைகளுக்கு ஏற்ப, பயிற்சிகளை செய்தால் எந்த பிரச்னையும் இருக்காது.