ஒற்றைத்தலைவலி பிரச்னையா.. சில டிப்ஸ் இதோ!!

ஒற்றைத்தலைவலி என்பது தலையின் முன்பகுதியில் இரு புறமும் ஏற்படக்கூடிய நீண்ட நாள் பிரச்னையாகும்.

தலைவலியோடு வாந்தி, தலைச் சுற்று, மயக்கம், கழுத்துவலி போன்ற சிறு, சிறு பிரச்னைகள் ஏற்பட்டு அன்றாட வேலைகளை செய்ய முடியாத அளவில் பாதிப்பு ஏற்படும்.

இது சிறு குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரையும் பாதிக்கும். ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

சரியான துாக்கம் இல்லாமை, மனதை கவலையாகவும், வருத்தமாகவும் வைத்துக்கொள்ளுதல் போன்றவற்றால் அதிகம் வரக்கூடும்.

ஓமத்தை நன்கு இடித்து துணியில் மூட்டையாகக் கட்டி, அடிக்கடி அதை மோந்து பார்க்கலாம். இதனால் வலியிலிருந்து சற்று விடுபடலாம்.

வெற்றிலையில் தேங்காய் எண்ணெய் தடவி லேசாக வாட்டி, வலி உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். நல்ல பலன் கிடைக்கும்.

மனம் அமைதியாக இருக்க யோகா உதவும் என்பதால் அவற்றை முயற்சிக்கலாம். மேலும் மூச்சுப் பயிற்சியும் மேற்கொள்ளலாம்.