இன்று விவேகானந்தர் நினைவு தினம்... அவரின் தன்னம்பிக்கையூட்டும் வரிகள் சில !
இரக்கம் கொண்ட இதயம், சிந்திக்கும் திறன் படைத்த மூளை, வேலை செய்யும் கைகள்... இவை மூன்றும் இருந்தால் சாதிக்கலாம்.
நீ தியாகம் செய்ய தயாராக இருந்தால் மட்டுமே, உலகிலுள்ள மற்றவர்களின் மனங்களை வெல்ல முடியும்.
அன்பில் கரைந்து விடு. அது உன்னை சொர்க்கத்தில் சேர்த்து விடும்.
எதையும் தெரியாது என சொல்லாதே. சாதிக்கும் துணிவோடு வீரனை போல செயல்படு.
நன்மையை போலவே தீமையும் மனிதனுக்கு நல்ல பாடத்தை கற்றுத் தருகிறது.
குறிக்கோளுக்குரிய முக்கியத்துவத்தை, அதை அடையும் முயற்சிக்கும் கொடுக்க வேண்டும்.
பொறுமையே வெற்றிக்கு அடிப்படை இதை உணர்ந்து செயல்படு.
அன்பே அடிப்படை பண்பு. ஆனால் வெறுப்பு ஒருவனை அழித்து விடும்.
என்னால் எல்லாம் செய்ய முடியும் என நம்புங்கள்; வெற்றி பெறுவீர்கள்.