இனி ஸ்டைலா ஆஃபீஸ் போங்க.....
வேலைக்கு செல்லும் இளம்பெண்கள் ஸ்மாட் அண்ட் ஸ்டைலிஷ் லுக்கில் அழகாக ஜொலிக்க சில ட்ரெண்டி ஆபீஸ்வியர்கள் பற்றி பார்ப்போமா....
ரஃபில் ஷர்ட் வித் ஃப்ளேர்ட் பேன்ட்ஸ், பெண்கள் அணியக்கூடிய சாதாரண லேடிஸ் ஷர்ட்டில் முன்பக்கம், கைகள், தோள்பட்டை, கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதியில் ஃப்ரில்கள் கொண்டுள்ளதுதான் ரஃபில் ஷர்ட்.
பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்களுக்கு இந்த பினோஃபோர் ட்ரஸ் ஸ்டைலாகவும், கம்ஃபோர்ட் ஆகவும் இருக்கும். உள்ளே காலருடன் ஃபுல் ஸ்லீவ் வெள்ளை ஷர்ட் அணிந்து, அதன் மேலே செக்கர்ட் பினோஃபோர் அணியலாம்.
எப்போதும் ஃபார்மல் ஆடை அணிந்து ஆபீஸ் செல்வது, சலிப்பை ஏற்படுத்திவிடும். அதனால் ஃபுல் ஸ்லீவ் மற்றும் டர்ட்டில் நெக் டாப்புடன் ப்ளீட்டட் ஸ்கர்ட்டை இன் செய்து அணிந்து பாருங்கள் ஆபீஸில் யூனிக்காக தெரிவீர்ங்கள்.
70 மற்றும் 80களில் ஹாட் பேஷனாக இருந்த ரெட்ரோ ஸ்டைல் ஆடைகளுக்கான மவுசு இன்றளவும் குறையவில்லை. ஆன்கிள் லெங்த் ப்ளேர்ட் பேன்ட், ஒரு நார்மல் ப்ளைன் டி-ஷர்ட் உடன் ஒரு கோட் அணிந்தால், பெர்ஃபெக்ட் ரெட்ரொ ஸ்டைல் லுக் கிடைத்ததுவிடும்.
சாதாரண ஃபுல் ஸ்லீவ் லேடிஸ் ஷர்ட்டுடன் ஹை வெய்ஸ்ட், ஆங்கிள் லெங்த் பேன்ட்-ஐ இன் செய்து அணிந்தால் மினிமலிஸ்ட் லுக் கிடைக்கும். உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஹீல் ஷூ, கட் ஷூ அல்லது பாய்ன்டட் ஹீல்ஸுடன் அணியலாம்.