சுருட்டை முடியை பராமரிக்க ஈஸி டிப்ஸ்..!
சுருள் சுருளாக அழகான முடி இருப்பவர்களுக்கு தலைக்கு குளிப்பது, மற்றும் கூந்தல் பராமரிப்பு என்பதே கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும்.
சுருட்டை முடியை பராமரிப்பது உங்களுக்கு கடினமாக உணர்ந்தால் இந்த எளிமையான ஹேர் வாஷ் டிப்ஸை பின்பற்றுங்கள்.
சுருள் கூந்தல் இருப்பவர்கள் ஷாம்பு பயன்படுத்தும் முன்பு, கூந்தலுக்கு ஈரப்பதத்தை அளிக்க, எண்ணெய் அல்லது ஹேர் மாஸ்க் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
சுருள் முடிக்கான பெஸ்ட் பிரெண்ட், கண்டிஷனர் தான். எனவே, எப்போதும் மலைக்கு குளிக்கும் போது அவற்றை பயன்படுத்த வேண்டும்.
நீங்கள் கண்டிஷனர் அப்ளை செய்த பின்னர் கூந்தலை அலச வேண்டாம். அப்படியே விட்டுவிடலாம்.
ஈரப்பதமும் கூந்தலின் இயற்கையான சுருள் தன்மையும் மாறாமல் அடுத்த ஹேர் வாஷ் வரை அப்படியே இருக்கும்.
லைட்வெயிட் கர்லிங் ஜெல்ளை ஹேர் வாஷ் செய்யும் போதெல்லாம் பயன்படுத்தலாம். இது உங்கள் சுருள் முடிக்கு அதிக ஹைட்ரேஷன் வழங்கி, 2 நாட்கள் வரை ஈரப்பதத்தை நீட்டிக்க செய்யும்.