இன்று உலக செவித்திறன் தினம்!

காது கேளாமை மற்றும் செவித்திறன் இழப்பைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலக செவித்திறன் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

செவித்திறன் கவனிப்பின்மை மற்றும் அணுகுமுறை பற்றாக்குறை என, காது பற்றிய விழிப்புணர்வு குறைபாடே இதற்கு காரணம். அதை தடுக்க சில வழிகள் இதோ...

குளிர்ச்சியான மற்றும் சமைக்காத காய்கறி உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிருங்கள். இது காதுகளில் செல்லும் குழாய்களில் ரத்த ஓட்டத்தை தடை செய்து, உள் உறுப்புகளை பாதிக்கும்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் உணவுகள், பால் பொருட்களை தவிர்த்தல் நல்லது. இவை அனைத்தும், அதிகப்படியான சளியை உருவாக்கி, காதுகளின் உள் உறுப்புகளை பாதிக்கும்.

வைட்டமின், 'டி, பி12' உணவுகள், போலிக் அமிலமுள்ள உணவுகள், வெள்ளை பூண்டு போன்றவைகளை அன்றாட உணவில் பயன்படுத்துங்கள்.

பொட்டாசியம் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டால், இரைச்சலால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கலாம்.

பட்டாசு சத்தம், கச்சேரி, வாகன சத்தம் மற்றும் பொது கூட்டங்கள் போன்ற இடங்களில் எழும் இரைச்சல் சூழ்ந்த இடத்தில் இருப்பதை தவிர்க்க முயலுங்கள்.

அதிக சத்தம் உள்ள சூழலில் வேலை செய்யும் நிர்ப்பந்தம் இருந்தால், மிருதுவான 'இயர் பிளாக்ஸ்' அல்லது 'இயர் மப்ஸ்' பொருட்களை பயன்படுத்துங்கள்.