சம்மருக்கு விசிட் செய்ய தமிழகத்தில் பட்ஜெட் பிரண்ட்லி மலைவாசஸ்தலங்கள் சில !
திண்டுக்கல் அருகேயுள்ள பன்றிமலை இதமான வானிலை மற்றும் நீர்வீழ்ச்சி, பள்ளத்தாக்குகளுடன் கூடிய அழகிய வியூ பாயின்ட்களுக்காக மினி கொடைக்கானல் என அழைக்கப்படுகிறது.
இது தேயிலை தோட்டமாக இருந்தாலும், அழகிய வெண் மேகங்கள், வளைந்து செல்லும் கொண்டை ஊசி வளைவுகள் என இயற்கை ஆர்வலர்களை வெகுவாக ஈர்க்கிறது மேகமலை.
ஊட்டியில் இருந்து 30 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள மசினக்குடி இயற்கைப் பிரியர்களின் பேவரிட் ஆக உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மாசுபடாத இடங்களில் இது ஒன்றாகும்.
திருநெல்வேலியில் மணிமுத்தாறுக்கு அருகிலுள்ள மலை சுற்றுலாத் தலம்தான் மாஞ்சோலை. வழியெங்கும் அடர்ந்த மரங்கள், தேயிலைத் தோட்டங்களை ரசித்துக் கொண்டே செல்லலாம்.
கடல் மட்டத்தில் இருந்து 1200 அடி உயரத்தில் அமைந்துள்ள கொல்லிமலை, இயற்கை அழகும், ஆன்மிகமும் இணைந்துள்ள சுற்றுலாத்தலம்.
ஊட்டிக்கு அருகிலுள்ள கோத்தகிரி பழமையான மலை வாசஸ்தலமாகும். தேயிலை தோட்டங்கள், தொட்டபெட்டா மலைத்தொடர், மூடுபனி மூடிய மலைகள், பள்ளத்தாக்குகள் என இயற்கைப் பிரியர்களை வெகுவாக கவர்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வால்பாறை கோவை மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். நண்பர்களுடன் லாங் ரைடு செல்ல பைக் பிரியர்களின் சாய்ஸ் ஆக இது இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏலகிரி தமிழகத்தின் ஆஃப்பீட் மலைவாசஸ்தலமாக உள்ளது. பூங்காக்கள், கோவில்கள், ஏரிகள் போன்றவற்றுக்கு பெயர் பெற்றிருந்தாலும், ஏலகிரியின் முக்கிய சுற்றுலா அம்சம் சுவாமிமலை மலையாகும்.