வாழ்க்கையில் வெற்றி பெற தூக்கி எறிய வேண்டிய 7 உணர்வுகள்

கோபம்... எங்கோ எழும் பிரச்னையை இயலாமையால் மனதுக்குள் வைத்துக் கொண்டு பிறரிடம் காட்டுவது தவறானது மட்டுமின்றி ஆபத்தானதும் கூட. எனவே, முடிந்தளவு கோபத்தை தவிர்க்கவும்.

சோகம்... வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் நிறைந்தது என்பதால் பழைய விஷயங்களை நினைக்காமல் வாழ்க்கை பாதையில் கவனத்தை செலுத்தி சோகத்தை துரத்துங்கள்.

கவலை... எந்த ஒரு செயலையும் தீவிரமாக ஆராய்ந்து தெளிவாக புரிந்து கொண்டாலே கவலைகள் பறந்தோடி விடும் என்பதால், கவலை தரக்கூடிய சூழலில் இருந்து விடுபட கற்றுக்கொள்ளுங்கள்.

தாழ்வு மனப்பான்மை... ஒரு விஷயத்தை நூறு சதவீதம் முழுமையாக உங்களால் செய்ய முடியும் என்ற நேர்மறையான எண்ணத்தை வளர்த்தால் தாழ்வு மனப்பான்மை என்பதே வராது.

குற்ற உணர்வு.... எதிர்மறையாக நினைப்பதை தூக்கி எறிந்தாலே வீண் மனக்குழப்பத்தை தவிர்க்கலாம்.

புரிதல் இல்லாமை... நீங்களாகவே மனதில் எதிர்மறை எண்ணத்தை வளர்த்துக்கொண்டு முடிவெடுக்கக்கூடாது. குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களை புரிந்துகொள்வது மிகவும் அவசியமானது.

பொறாமை... நெருங்கிய நண்பரைக்கூட எதிரியாக நினைத்து வாழ்வை பின்னோக்கி தள்ளும் என்பதால், பொறாமையை கட்டாயமாக தூக்கி எறிய வேண்டும்.