நோய்களைக் கண்டறியும் ரோபோக்கள்!
சமீபத்தில் இஸ்ரேல் விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட மோப்ப சக்தியுடைய ரோபோட், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் துறையில் பெருமளவு பேசப்படுகிறது.
கரப்பான்பூச்சிகள் தங்கள் இரண்டு கொம்புகளை நுண்ணறியப் பயன்படுத்துகின்றன.
அதேபோல இந்த ரோபோவின் மேல், பொருத்தப்பட்டிருக்கும் இரண்டு கொம்பு போன்ற உணர்கருவிகள், இவற்றிற்கு மோப்பம் பிடிக்க பயன்படுகின்றன.
இதன் மூலமாக அவை நோய்களை கண்டறிவதற்கும் பாதுகாப்பு பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படவிருக்கின்றன.
உணர்கருவிகள் வழி வாசனைகளை, எலக்ட்ரோட் சிக்னல்களாக மாற்றிக்கொண்டு நோய்த்தொற்றின் வகையை தன்னுடைய ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மூலம் கண்டறியும்.
உயிரி தொழில்நுட்பத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ரோபோக்கள், பயோ ஹைப்ரிட் வகையை சார்ந்ததாகும்.
இவை எதிர்காலத்தில் போதை பொருட்கள் மற்றும் வெடிப்வவபொருட்கள் எங்கேயும் இருக்கின்றதா? என்பதை கண்டறிகிறது.
உணவில் ஏதேனும் நஞ்சுக் கலந்திருக்கிறதா என்று உணவுப் பாதுகாப்புத்துறைக் கண்டறியவும் உதவும் என விஞ்ஞானி பென் கூறுகின்றார்.