இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்

ஒவ்வொரு ஆண்டும், டிச., 10ம் தேதி, சர்வதேச மனித உரிமைகள் நாளாக கொண்டாடப்படுகிறது.

1948 டிச., 10ல் பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் 58 நாடுகள் அடங்கிய ஐக்கிய நாடுகள் பொதுச்சபை இந்த பிரகடனத்திற்கு அங்கீகாரம் வழங்கியது.

1950ம் ஆண்டில் இருந்து இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அனைத்து மனித பிரஜைகளும் சமமானவர்கள், சட்டத்திற்கு உட்பட்ட உரிமைகள் பெற்றவர்கள், அடிப்படை சுதந்திரம் கொண்டவர்கள் என்பதே இதன் அடிப்படை அம்சமாகும்.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என திருவள்ளுவர் மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்கான உரிமைகளை குறிப்பிட்டு பிறப்பினால் வேறுபடுத்தல் கூடாது என்றார்.

மனிதர்கள் அனைவருக்கும் மதம், இனம், மொழி, நிறம், அரசியல் பாகுபாடின்றி அனைத்து உரிமைகளும் கிடைப்பதை உறுதி செய்வதே மனித உரிமை தினத்தின் நோக்கம்.

மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வையும், அதன் பண்பையும் நம்மிடையே வளர்த்தெடுப்போம். மேலும் மக்களின் உரிமைகள் அனைவராலும் போற்றி பாதுகாப்போம்.