உலக ஆமைகள் தினம் இன்று!

ஜெல்லி மீன்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தவது, கடல் புற்களை நிலை நிறுத்துதல், கடலோர மணல் திட்டுகளை வளப்படுத்துதல் என கடலின் சுற்றுச்சூழலுக்கு ஆமைகள் உதவுகின்றன.

ஆமைகள் அழிவுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் முக்கிய காரணம்.

ஆமைகள், அதன் வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி மே 23ல் உலக ஆமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

சூழ்நிலைக்கேற்ப நிலத்திலும், நீரிலும் வாழும் தன்மை கொண்டது. நிலத்தில் வாழும் ஆமைகள் டார்டாய்ஸ் (Tortoise), தண்ணீரில் வாழும் ஆமைகள் டர்ட்டில் (Turtle) என அழைக்கப்படுகின்றன.

300 வகை ஆமைகள் உள்ளன. ஆயுட்காலம் 150 - 300 ஆண்டுகள். தங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால், தற்காத்துக்கொள்ள அவை ஓட்டினுள் ஒளிந்து கொள்ளும்.

இவை ஊர்வன இனத்தை சேர்ந்தவை. மணிக்கு 5.5 கி.மீ., வேகத்தில் செல்வதால் எளிதில் சுறா, திமிங்கலங்களுக்கு இரையாகின்றன.

சில இடங்களில் செல்லப்பிராணிகளாகவும் வளர்க்கப்படுகின்றன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அதிகளவில் வளர்க்கின்றனர். சந்ததி, சந்ததியாக குடும்பத்தில் அவை அங்கம் வகிக்கும்.

அண்டார்டிகா கண்டத்தைத் தவிர்த்து உலகின் அனைத்துப் பகுதியிலும் ஆமைகள் வளர்கின்றன. இந்தியாவில் ஐவகை நிலத்திலும் ஆமைகள் வளரும்.

1835ம் ஆண்டு சார்லஸ் டார்வின் தனது ஆய்விற்காகப் பயன்படுத்திய ஹாரியாட் ஆமை, கடந்த 2006ஆம் ஆண்டு இறந்தது என்றும், 176 ஆண்டுகள் வாழ்நாளைக் கொண்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.