இந்தியாவிலுள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் !

கோனார்க்கில் உள்ள சூரியன் கோவில், 13ம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டதாகும். தேர் வடிவில் செதுக்கப்பட்ட கல் சக்கரம், தூண்கள், சுவர்கள், குதிரைகள் என பிரமாண்டமாக உள்ளது.

தமிழகம், மகாபலிபுரத்தில், 8ம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நரசிம்மவர்மனால் கலைநயத்துடன் எழுப்பப்பப்பட்ட கடற்கரைக் கோவில் கட்டடக்கலைக்கு பிரபலமானது.

குஜராத்தின் பதான் நகரில், சரஸ்வதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது 900 ஆண்டுகள் பழமையான ராணியின் படிக்கிணறு என்ற ராணி கி வாவ். இதில், 800க்கும் மேற்பட்ட அழகிய சிற்பங்கள் உள்ளன.

பீகாரின் நாலந்தா தொல்பொருள் தளம் கல்வி மையமாகவும், கிமு 3 முதல் கிபி 13ம் நூற்றாண்டு வரை புத்த மடாலயமாகவும் இருந்தது. தற்போது ஸ்தூபிகள், சன்னதிகள், விஹாரங்களின் எச்சங்களை பார்க்கலாம்.

மகாராஷ்டிராவிலுள்ள எல்லோரா குகைகள் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற உலக பாரம்பரிய மற்றும் தொல்பொருள் தளமாகும். எல்லோரா குகைகள் பாறை வெட்டப்பட்ட கட்டிடக்கலைக்கு பிரபலமானது.

டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில்வே, நீலகிரி மலை ரயில் மற்றும் கல்கா-சிம்லா ரயில் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவின் மலை ரயில்வே உலக பாரம்பரிய தளங்களின் ஒரு பகுதியாகும்.

ஜந்தர் மந்தர் என்பது 18ம் நூற்றாண்டில் ராஜஸ்தானில் கட்டப்பட்ட வானியல் நோக்குக்கூடம். கற்களால் உருவாக்கப்பட்ட டெலஸ்கோப்பால் வானில் நட்சத்திரங்களை அருகே காணலாம்.

இந்தியாவின் மிக உயரமான மலைச் சிகரமாக நந்தா தேவி சிகரம் உள்ளது. இங்குள்ள பூக்களின் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவில் 600க்கும் மேற்பட்ட தாவர இனங்கள், 520க்கும் மேற்பட்ட விலங்கினங்கள் உள்ளன.