தங்கம் - வெள்ளி எதை வாங்குவது? முடிவெடுக்க சூப்பர் சூத்திரம்

கடந்த இரண்டு ஆண்டுகளில், தங்கம் மற்றும் வெள்ளியின் மதிப்பு இருமடங்கு ஆகிவிட்டது. இதில் எது சிறப்பான முதலீடு என்ற விவாதமே முதலீட்டாளர் மத்தியில் உருவாகிவிட்டது.

எப்படி முடிவெடுப்பது? இந்த முடிவை எடுப்பதற்கு, ஆண்டாண்டு காலமாக முதலீட்டாளர்கள் ஒரு சூத்திரத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். அந்தச் சூத்திரம் என்ன என்பதை பார்ப்போம்.

தங்கத்தின் ஒரு கிராம் விலை ÷ வெள்ளியின் ஒரு கிராம் விலை. உதாரணமாக, தங்கம் ஒரு கிராமின் விலை 11,500 ரூபாய், வெள்ளி ஒரு கிராமின் விலை 190 ரூபாய் அப்படி எனில் 11,500 ÷ 190 = 60.53, (61)

இந்த விகிதத்தை இப்படிப் புரிந்துகொள்ளலாம்: 78க்கு மேலே வெள்ளியின் மதிப்பு குறைவு அப்போது வெள்ளியை வாங்கலாம் ; 70க்கு கீழே தங்கத்தின் மதிப்பு குறைவு அப்போது தங்கத்தை வாங்கலாம்.

முக்கியமான விஷயம் : தங்கத்துக்கு சர்வதேச மதிப்பு இருக்கிறது. நிலையான சொத்து. பாரம்பரியமாக இதற்கு மதிப்பு உண்டு.

வெள்ளியின் விலைகள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். ஆனால், நல்ல வளர்ச்சி தரும். அதுவும் தொழில்துறையினர் தேவை அதிகமாகும் போது, விலை உயரும்.

உங்கள் போர்ட்போலியோவில் தங்கமும், வெள்ளியும் இருக்க வேண்டும். ஆனால், மேலே சொன்ன விதிமுறைகள் மனதில் இருக்கட்டும்.

அதேசமயம், சர்வதேச சம்பவங்கள், நாணய விலையில் ஏற்ற இறக்கம், பொருளாதார அதிர்ச்சிகள் நிச்சயம் இவற்றின் விலையில் தாக்கம் ஏற்படுத்தும்.