நெஞ்செரிச்சலை தவிர்க்க உதவும் மஞ்சள்

சமையலுக்கு பயன்படும் மஞ்சள், மருத்துவ குணம் மிக்கது என்பதை அறிவோம். இது சித்த, ஆயுர்வேத, சீன பாரம்பரிய மருத்துவத்தில் நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ளது.

இதிலுள்ள குர்குமின் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸினனேற்ற பண்புகளை கொண்டுள்ளது.

மஞ்சளிலுள்ள குர்குமின் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கும், மேலும் வலுவாகவும் பாதுகாப்பாகவும் இருக்க உதவுகிறது.

மூளை மற்றும் இதய ஆரோக்கியத்தையும் இது மேம்படுத்துகிறது.

மஞ்சள், நெஞ்சு எரிச்சலுக்குக் காரணமான அமில எதுக்கல் நோயைக் கட்டுப்படுத்தும் என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

தாய்லாந்தில் கடந்தாண்டு நடந்த ஆய்வில், மூன்று குழுவாக பிரிக்கப்பட்டு இந்த நோய்க்குப் பரிந்துரைக்கப்படும் மருந்து, 'குர்க்குமின்' மாத்திரை மற்றும் மஞ்சள் அளிக்கப்பட்டது.

ஆய்வின் முடிவில் மஞ்சள் பயன்படுத்தியவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்பட்டது; எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.

மஞ்சளை எந்த வடிவில் பயன்படுத்தினால் நோயைச் சுலபமாகக் கட்டுப்படுத்தலாம் என தொடர்ந்து ஆய்வுகள் நடக்கின்றன.