அல்ட்ரா சவுண்டு சிகிச்சை.. நன்மைகளும், வதந்திகளும்!

எக்ஸ் ரே, சிடி ஸ்கேன்களில் உபயோகிக்கும் அணுக்களில் இருந்து வெளிப்படும் சக்தி வாய்ந்த அயனியாக்கும் கதிர்வீச்சை அல்ட்ரா சவுண்டில் பயன்படுத்துவதில்லை.

திசுக்கள், செல்களில் எவ்வித பாதிப்பையும் எற்படுத்தாத, இதைவிட அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளை பயன்படுவதாக கூறப்படுகிறது.

இது கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல், வளர்ச்சியை கண்காணிப்பதற்கு உதவுகிறது.

கதிர் வீச்சினால் பாதிப்பு ஏற்படும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என டாக்டர்கள் கூறுகின்றனர்.

கருவில் உள்ள குழந்தை எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பதற்கு பொதுவாக இம்முறை பயன்படுகிறது.

மேலும் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், தசைகள், தசைநாற்கள், மூட்டுகள், ரத்த நாளங்கள் என்று உள் உறுப்புகளை பரிசோதித்து நோய்களை கண்டறிய உதவுகிறது .

இதில், 2டி, 3டி, 4டி டைனமிக் இமேஜிங், ரத்த ஓட்டத்தை அறிய டாப்ளர், எலாஸ்டோகிராபி என்று பல வகைகள் உள்ளன.

அனுபவம் மிக்க வல்லுநர் கையாளும் போது, முடிவுகள் துல்லியமாக இருக்கும். பரிசோதனையின் போது எவ்வித வலியோ, அசவுகரியமோ இருக்காது.

2டி, 3டி அல்ட்ராசவுண்ட் இரண்டிலும் ஒரே மாதிரியான ஒலி அலைகள் உள்ளன. முப்பரிமாண முறையில் 3டி முடிவுகள் இருக்கும்.