கல்லீரல் வைரஸ் தொற்று... குடும்பத்தில் பிறர் செய்ய வேண்டியதென்ன?

கல்லீரல் வைரஸ் தொற்று (Viral Hepatitis) என்பது ஹெபடைடிஸ் வைரஸ்களால் கல்லீரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் பாதிப்பாகும்.

'ஹெபடைடிஸ் ஏ' வைரஸ், உணவு, தண்ணீர் மூலமாக பரவக்கூடியது.

கழிவறைகளை சுத்தமாக பராமரிப்பது, சோப்பு போட்டு கை கழுவுவது, காய்ச்சிய தண்ணீர் குடிப்பது, வீட்டில் சமைத்த உணவு சாப்பிடுவதன் மூலம் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.

'ஹெபடைடிஸ் பி' வைரஸ் பிறருக்கு பரவக்கூடியது.

எனவே, குடும்ப உறுப்பினர்கள் 'எச்.பி.எஸ்.ஏ.ஜி' (HBsAg) என்ற பரிசோதனை செய்து, அது நெகட்டிவாக இருந்தால், தடுப்பூசி போட்டு கொள்வது அவசியம்.

அரசு மருத்துவமனைகளிலும், இத்தடுப்பூசி உள்ளது. இதில், மூன்று டோஸ் போட்டால், நிரந்தரமாக, 'ஹெபடைடிஸ் பி' வைரஸிலிருந்து காத்துக் கொள்ளலாம்.

'ஹெபடைடிஸ் சி' வைரஸால் பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தை, மற்றவர்களுக்கு செலுத்தினால் மட்டுமே பரவும்.