கண் ஆரோக்கியத்தை காக்கும் வைட்டமின் ஏ!

பதப்படுத்திய, சுத்திகரித்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால், வைட்டமின் 'ஏ, சி, இ' ஊட்டச் சத்துக்களின் குறை பாட்டால், பார்வை சம்பந்தப் பட்ட பாதிப்புகள், குழந்தைகளி டம் அதிகம் காணப்படுகிறது.

கண்களுக்கு மட்டுமல்ல, எலும்புகள், நரம்பு மண்டல ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் 'ஏ' அவசியம்.

கண்களின் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், வெளிச்சத்திற்கு ஏற்றவாறு தன்னைத் தானே சரி செய்யும் தன்மையை கொடுப்ப திலும் வைட்டமின் 'ஏ' முக்கிய பங்கு வகிக்கிறது.

இக்குறைபாட்டை ஆரம்ப நிலையிலேயே சரி செய்து கொள்ள வேண்டும்.

வைட்டமின் ஏ குறைபாடு அதிக நாட்கள் நீடித்தால், கண் சுரப்பிகளின் வெளிப்புற திசுக்களில் வீக்கத்தை ஏற்படுத்தி, கண்ணீர் வெளி வருவதை தடுத்து விடும்.

மீன், மீன் எண்ணெய், முட்டைமஞ்சள் கரு, ஈரல், பசும் பால், நெல்லிக்காய், பப்பாளி, சிவப்பு கொய்யா, முருங்கை, மாம்பழம் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

100 கிராம் மஞ்சள் பூசணியில் ஒரு நாளைக்கு ஒருவருக்கு தேவையான வைட்டமின் ஏ சத்து, இரு மடங்கு அதிகமாக கிடைக்கிறது.