நம்மிடமே இருக்கு மருந்து... பொன்னாங்கண்ணி

பொன்னாங்கண்ணி கீரை, அனைவரும் அறிந்தது தான். ஆனால், அதில் உள்ள மருத்துவ குணங்கள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பொன்னாங்கண்ணி கீரை, தாய்ப்பாலை பெருக்கும். பித்தப்பை சீராக இயங்கச் செய்யும் மற்றும் தூக்கத்தை தூண்டக்கூடியது.

நரம்பு மண்டலத்தை சீர் செய்து, சாந்தப்படுத்துவதால், நரம்பு தொடர்பான நோய்களை தவிர்க்க உதவுகிறது.

ஞாபக சக்தியைத் தூண்ட கூடியது. உடல் உஷ்ணம் நீங்கி, கண்களுக்கும், மூளைக்கும் குளிர்ச்சி தரவல்லது. தலைவலி, மயக்கத்தை தணிக்க கூடியது.

பொன்னாங்கண்ணி கீரை விழுதை, எண்ணெயில் இட்டு காய்ச்சி, தலைக்கு தடவினால், கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்த உதவும்.

இக்கீரையை உணவில் அடிக்கடி சேர்ப்பதால், இரைப்பை கோளாறுகளுக்கு தீர்வு கிடைக்கிறது. சிறுநீரைப் பெருக்கும் தன்மையுடையது.

குடலிறக்க நோய் வராமல் இருக்கவும், நெஞ்சு சளியை கரைக்கவும், மார்பு இறுக்கத்தை போக்கவும் வல்லது. ஆஸ்துமா போன்ற நுரையீரல் கோளாறுகளையும் அகற்றுகிறது.

ரத்தத்தில் சேரும் சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்தை குறைக்க வல்லது. பூஞ்சைக் காளான்களை துரத்த வல்லது

புண்களை ஆற்றக் கூடியது. ரத்தத்தில் சேர்ந்த கழிவுகளை போக்கி, புற்று நோய் பாதிப்பை தவிர்க்கிறது. பொன்னாங்கண்ணி கீரையை அடிக்கடி சாப்பிட, கண் ஆரோக்கியம் மேம்படும்.