பிறந்த குழந்தைகளை வெயில் காலத்தில் பாதுகாக்கும் முறைகள் என்ன?
பிறந்த குழந்தைகளின் கை, கால்களை துணியில் மூடி வைக்காமல் அறையின் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு குழந்தைக்கு வெக்கை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
இதனால் குழந்தையின் உடலில் நீர்ச்சத்து குறைவதை தடுக்க முடியும்.
பருத்தி ஆடைகளை அணிதல் நல்லது. கழுத்து, கையில் மாலை, கயிறு அணிவதால் புண், தொற்றுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதால் தவிர்க்க வேண்டும்.
காலையில் குழந்தையை குளிப்பாட்டிய பின் இருமுறை மிதமான வெப்பம் உள்ள தண்ணீரில் பருத்தி துணியை நனைத்து துடைத்து எடுக்க வேண்டும். வேர்க்குரு பவுடர் போடக்கூடாது.
பால் கொடுக்கும் தாய்க்கு உடல் நலப்பாதிப்பு ஏற்பட்டால் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
பெரியவர்கள் வெறும் தண்ணீரில் கைகளை கழுவி சுத்தம் செய்யாமல் சோப்பு உபயோகித்து கைகளை சுத்தம் செய்து விட்டு குழந்தையை பெற வேண்டும்.
தாய்ப்பால் குடிக்கும் 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை உள்ள குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.