குழந்தைகளின் பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் என்ன?

குழந்தைகள் சாக்லேட் சாப்பிடுவதால் மட்டும் பற்களில் சொத்தை ஏற்படுவதில்லை.

பால் பாட்டில்களை இரவில் துாங்கும் போது வாயில் வைத்தபடி துாங்குவதாலும் சொத்தை ஏற்படும். இந்த பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

வெள்ளை நிற காட்டன் துணியால் குழந்தையின் பற்களை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.

4 வயதிற்கு பின் ப்ளூரைடு பேஸ்ட் கொண்டு குழந்தைகளை காலை, இரவு பற்களை சுத்தம் செய்ய வைக்க வேண்டும்.

சொத்தை பாதித்த பற்களை அகற்றுவதை தவிர்த்து, பல் மருத்துவரை அணுகி ப்ளூரைடு வார்னிஷ் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.

இதனால் பாதிப்பு மற்ற பற்களுக்கு பரவுவதை தடுக்க முடியும். 6 வயது முதல் 12 வயது வரை பால் பற்கள், மற்ற பற்கள் விழுந்து முளைக்கும்.