இன்சூரன்ஸ் தொந்தரவு அழைப்புகளை தடுக்க என்ன செய்யலாம்?

அறியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை தவிர்த்து, அடிக்கடி அழைக்கும் எண்களை தடை செய்து உங்கள் மன அமைதியை பாதுகாப்பது உங்கள் கையில் உள்ளது.

'டெலிமார்க்கெட்டிங்' அழைப்புகளை ஒரு முறை எடுத்தால், அவர்கள் மேலும் பல முறை அழைப்பார்கள்.

அவர்கள் தங்களுடைய வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு, அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் விடுவதும் ஒரு நடைமுறை அணுகுமுறை.

இப்படிப்பட்ட தொந்தரவுகளை பற்றி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்க்கு புகார் அளிக்கும் வசதி உள்ளது.

அதற்கான நடைமுறைகள் அதன் இணையதளத்தில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளன.

புகார் அளித்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், இதற்காக நீங்கள் செலவிட விரும்பும் நேரம் மற்றும் முயற்சி முக்கியமானது.

முதலில் எளிய முறைகளை பின்பற்றி பார்த்து, அதனால் பிரச்னை குறைந்தால், மற்ற நடவடிக்கைகளை தவிர்க்கலாம்.