ஈறுகளில் ரத்தக் கசிவு எதனால் வருகிறது?

ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு ஆரோக்கியமற்ற அல்லது நோயுற்ற ஈறுகளுக்கான அறிகுறி.

இதற்கான காரணங்களை சரி செய்ய வேண்டும், பற்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.

பற்கள் துலக்கும் போதோ அல்லது பல் இடுக்கை சுத்தம் செய்யும் போதோ ரத்தக்கசிவு ஏற்படலாம்.

ஈறு வீக்கம் கடுமையானாலும், அதன் கீழ் தாடை எலும்புகள் வரை செல்லும்போதும் ரத்தக்கசிவு அதிகமாகும். ஈறுகள் - பற்கள் சந்திக்கும் இடங்களில் பிளேக் உருவாகி நோய்தொற்று ஏற்படும்.

பிரசவ காலத்தின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் கூட ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படலாம்.

வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே குறைபாடு. நீரிழிவால் பாதிக்கப்பட்டாலும் ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படலாம்.

எனவே, ரத்தக் கசிவு அடிக்கடி ஏற்பட்டால் பல் டாக்டரை அணுகி பரிசோதனை செய்து, அதற்கேற்ற மருந்துகளை எடுக்க வேண்டும்.