குழந்தைகளுக்கு அடிக்கடி காதுவலி உண்டாக என்ன காரணம்?
சிறு குழந்தைகளுக்கு காதுவலி ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம்.
அடிக்கடி ஏற்படும் மேல் சுவாசக்குழாய் நோய்த்தொற்று அல்லது ஒவ்வாமையால் காதுவலி ஏற்படக்கூடும். இதை மருந்துகளால் கட்டுப்படுத்தலாம்.
அடினாய்டு அல்லது டான்சில் எனப்படும் நிணநீர்ச் சுரப்பிகள் பெரிதாகி 'யூஸ்டேஷியன் குழாயை அடைத்து, திரவம் தேங்கி அதனால் உண்டாகும் தொற்றினால் கூட காதுவலி ஏற்படலாம்.
சில நேரங்களில் இதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படும்.
காதிற்குள் திரவம் சேர்ந்தால் கூட சில நேரங்களில் வலி ஏற்படும்.
இது தீவிரமாகும் பட்சத்தில் தலைப்பகுதி எக்ஸ்ரே பரிசோதனை, 'இம்பிடன்ஸ் ஆடியோமெட்ரி' பரிசோதனை மூலம் பிரச்னையை கண்டறியலாம்.
இதேப்போல், கேட்கும் திறன் குறைபாடு இருந்தால், 'அடினாய்டகடமி' செய்து சிறிய குழாய் மூலம் காதில் இருக்கும் திரவத்தை வெளியேற்றி கேட்கும் திறனை மீட்டெடுக்க முடியும்.