இளம் பருவத்தினருக்கு தற்கொலை எண்ணம் எதனால் தோன்றுகிறது?

இளம் பருவத்தினருக்கு தற்கொலை எண்ணம் தோன்றுவதற்கு பல்வேறு சமூக, கலாசார மற்றும் குடும்பக் காரணிகள் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கின்றன.

பொதுவாக குடும்பச் சூழல் முக்கியமாக உள்ளது. குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள், கடுமையான விமர்சனங்கள், ஆதரவின்மை, பலவீனமான உணர்வு தற்கொலைக்கு துாண்டுகிறது.

மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லுாரிகளில் நடக்கும் பிரச்னைகள், நண்பர்களுடனான உறவில் சிக்கல் மற்றும் சமூகத் தனிமை காரணமாக அமைகிறது.

இந்த எண்ணம் உள்ளவர்களை தனிமைப்படுத்தாமல் குடும்பத்தில் உள்ளவர்கள் அவர்களிடம் நெருக்கமாக பழக வேண்டும்.

அவர்களின் மனதில் இருக்கும் விஷயங்களை கேட்டு அவர்களுக்கு ஏற்றாற் போல் நடந்து கொள்ள வேண்டும்.

அவர்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களுடன் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டும்.

வீட்டிலும் கல்வி நிறுவனங்களிலும் பாதுகாப்பான அன்பான சூழலை உருவாக்க வேண்டும்.

தங்களை தாங்களே காயப்படுத்திக்கொள்ளக் கூடிய ஆபத்தான பொருட்களை அணுக முடியாதவாறு அவர்களை பாதுகாக்க வேண்டும்.

தொடர்ந்து அவர்கள் மன அழுத்தத்தில் இருப்பதை உணர்ந்தால் தாமதிக்காமல் மனநல ஆலோசகர் அல்லது மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.