அளவோடு சாப்பிட்டால் ஆபத்தில்லை

சர்க்கரைக்கு பதிலாக சைலிடால், சார்பிட்டால், லேக்டிட்டால் உள்ளிட்ட இனிப்புகள், தற்போது சுகர் ப்ரீ குக்கீஸ், சாக்லேட், கேண்டீஸ், சூயிங்கம் என பலவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

சர்க்கரையை விட மெதுவாக ரத்தத்தில் கலப்பதால், சர்க்கரை அளவு வேகமாக அதிகரிப்பதை தவிர்க்கும் தன்மை சைலிடாலுக்கு உள்ளது.

சுகர் ஆல்கஹால் என்ற வகையை சேர்ந்தவை இவை. பெயரில் 'ஆல்கஹால்' இருப்பதால், இதில் மதுபானங்களில் காணப்படும் 'எத்தனால்' உள்ளது என அர்த்தமில்லை.

இது வேறுபட்ட கெமிக்கல் ஸ்ட்ரக்ச்சரை கொண்ட இனிப்பு. சுகர் ப்ரீ என்பதால் அளவில்லாமல் சாப்பிடலாம் என்றில்லை.

அதிகமாக உட்கொள்ளும் போது வயிறு உப்புசம், வயிற்று பொருமல், வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அளவாக எடுத்துக்கொண்டால் பிரச்னையில்லை.

குழந்தைகளுக்கு சுகர் ப்ரீ குக்கீஸ், சாக்லேட் வாங்கும்போது, 'சுகர் ப்ரீ' என்பதை மட்டும் பார்க்காமல், அதில் சேர்க்கப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு விவரங்களையும் பெற்றோர் கவனிக்கவும்.

சைலிடால் இனிப்பு வகையை உட்கொள்வதால் இதய நோய் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆனால், சிறியளவில் உணவில் பயன்படுத்தும் போது, எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பது, உணவு மற்றும் ஜீரணவியல் சிறப்பு டாக்டர்களின் அட்வைஸாகும்.