வெற்றி, தோல்வியை தீர்மானிப்பது எது? ஹென்றி ஃபோர்ட்டின் தன்னம்பிக்கை வரிகள்!

நீங்கள் வெற்றி பெறப் போகிறீர்களா அல்லது தோல்வியடையப் போகிறீர்களா என்பதை உங்களின் சிந்தனை தான் தீர்மானிக்கிறது.

தோல்வி என்பது மீண்டும் துவங்குவதற்கான வாய்ப்பாகும். ஆனால், இந்த முறை இன்னும் அதிக புத்திசாலித்தனமாக.

தவறிலிருந்து நாம் எதுவும் கற்றுக்கொள்ளவில்லை என்றால், அது தான் உண்மையான தவறு.

குறைகளை மட்டுமே கண்டுபிடிக்காதீர்கள்; ஒரு தீர்வைக் கண்டுபிடியுங்கள்.

அனைவரும் ஒன்றாக முன்னேறினால், வெற்றி தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும்.

இந்த உலகம் உங்களுக்குச் செய்ததை விட, இந்த உலகத்துக்காக நீங்கள் அதிகமாக செய்தால், அதுவே வெற்றி.

நேர்மையான தோல்வியில் எந்த அவமானமும் இல்லை. ஆனால், தோல்விக்குப் பயப்படுவதே அவமானமாகும்.

எதுவும் குறிப்பிடும் அளவுக்குக் கடினமில்லை. அதை சிறிய வேலைகளாகப் பிரித்தால் எளிதாக இருக்கும்.