வெயிலில் அலைந்தால் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னாகும்?
வெயிலில் அலைவதால் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் கொப்பளங்கள் ஏற்படும். தலைச்சுற்றல் வரும்.
கூடுதலான தாகம், அதிக பசி ஏற்படும். நீரிழப்பு ஏற்பட்டு மயக்க நிலைக்கு செல்ல நேரிடும்.
எனவே, ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
வழக்கத்தை விட கூடுதலாக தண்ணீர் அருந்த வேண்டும். நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும்.
சர்க்கரை அளவை கூட்டும் மா, பலா, வாழை, சப்போட்டா பழங்களை தவிர்த்து நீர்சத்துள்ள தர்பூசணி, வெள்ளரி சாப்பிடலாம்.
முடிந்தால் இரு நேரம் குளிக்க வேண்டும்.