மூச்சுக்குழாய் நுரையீரல் பரிசோதனை என்றால் என்ன?
மூச்சுக்குழாய் நுரையீரல் பரிசோதனை என்பது (Bronchoscopy) நுரையீரலை உள்ளே பார்த்து பரிசோதிக்கும் ஒரு சிறப்பு முறை.
இதில் ஒரு மென்மையான சிறிய குழாயை (கேமராவுடன் கூடியது) நுரையீரலுக்குள், மூக்கு அல்லது வாய் வழியாக நுழைத்து, நுரையீரல் மற்றும் காற்றுக்குழாயைப் நேரில் காண முடியும்.
இந்த பரிசோதனை நீண்ட நாட்களாக குணமடையாத நிமோனியா, காரணம் தெரியாத காய்ச்சல், நுரையீரல் காசநோய் அல்லது புற்றுநோய் இருக்கிறதா என தெரிந்து கொள்ள பயன்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்கிருமி என்ன, அது காசநோயா அல்லது புற்றுநோயா என்பதை கண்டுபிடிக்க முடியும்.
பரிசோதனை செய்யும்போது மெதுவாக ஒரு குழாய் நுழைக்கப்படும்.
இது மிக பாதுகாப்பானது. சில நேரங்களில் சிறு ரத்தக்கசிவு அல்லது மூச்சுத்திணறல் ஏற்படலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
ஆனால் அவை எல்லாம் மருத்துவக் கண்காணிப்பில் எளிதாகக் கையாளக்கூடியவை தான் என கூறப்படுகிறது.