எலும்புப்புரை என்றால் என்ன? தடுக்க என்ன செய்யலாம்?

எலும்புகளை படிப்படியாக பலவீனமாக்கி, எளிதில் உடையும் நிலைக்கு கொண்டு செல்வது தான் ஆஸ்டியோபொராசிஸ். இதன் ஆரம்ப கட்டத்தில் வலியோ, அறிகுறியோ தெரியாது.

பொதுவாக முதியவர்களுக்கு ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறைவதால் எலும்புப்புரை வர வாய்ப்புகள் அதிகம்.

கால்சியம், வைட்டமின் 'டி' குறைபாடு, உடற்பயிற்சியின்மை, பரம்பரை பாதிப்பு முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது.

புகை மது பழக்கம், ஸ்டீராய்டு மருந்துகளை நீண்ட காலம் உட்கொள்வது ஆகிய காரணங்களாலும் வரலாம்.

பிரச்னையை தவிர்க்க உணவே சிறந்த மருந்து. பாலாடை கட்டி, பால், தயிர், கீரை, கேழ்வரகு, மீன் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை தாராளமாக சாப்பிடலாம்.

காலை இளம் வெயிலில் தினமும் 20 நிமிடங்கள் நின்றாலே உடலுக்கு தேவையான வைட்டமின் 'டி' கிடைத்துவிடும்.

பாதிப்பு வராமல் தடுக்கவும், அதிலிருந்து மீளவும் நடை பயிற்சி, எளிய உடற்பயிற்சிகளை தவறாமல் செய்ய வேண்டும்.