மனதை வெல்லும் வழி என்ன? விவேகானந்தரின் தன்னம்பிக்கை வரிகள்
நீ தியாகம் செய்ய தயாராக இருந்தால் மட்டுமே, உலகிலுள்ள மற்றவர்களின் மனங்களை வெல்ல முடியும்.
அன்பில் கரைந்து விடு. அது உன்னை சொர்க்கத்தில் சேர்த்து விடும்.
எதையும் தெரியாது என சொல்லாதே. சாதிக்கும் துணிவோடு வீரனை போல செயல்படு.
உன்னை பற்றி எண்ணாத நேரத்தில் உண்மையான வாழ்க்கையை நீ அனுபவிக்கிறாய்.
உனக்கு நீயே செய்து கொள்ளும் துன்பத்தை தவிர, வேறெதுவும் உன்னை நெருங்குவதில்லை.
உன்னை வலிமையானவன் என நீ நினைத்தால், உண்மையில் வலிமையானவனாக மாறி விடுவாய்.
எந்தச் செயலில் ஈடுபட்டாலும் உடல், உள்ளம் இரண்டையும் அதில் அர்ப்பணித்து விடு.
மனதை சரியான வழியில் செலுத்தினால், உன்னைக் காப்பதோடு விடுதலைக்கும் வழிவகுக்கும்.
நன்மையின் பக்கம் மனதை திருப்பினால், தீய எண்ணங்கள் உனக்குள் நுழைய முடியாது.