எந்த நாட்டில் தீவுகள் அதிகம்?

உலகில் தீவுகள் அதிகமுள்ள நாடு சுவீடன். இங்கு கடல், ஏரிகளை சேர்த்து மொத்தம் 2.67 லட்சம் தீவுகள் உள்ளன.

இதில் பெரும்பாலான தீவுகள், மக்கள் வசிக்காதவை.

இந்நாட்டின் மக்கள்தொகை 1.06 கோடி. இதில் 16 லட்சம் பேர், தீவுகளில் வாழ்கின்றனர்.

சுவீடனிலுள்ள தீவுகளில் பரப்பளவில் (3000 சதுர கி.மீ.,) பெரிய தீவு கோட்லாந்து. இதன் மக்கள்தொகை 61,029.

இதற்கு அடுத்து நார்வே (2.39 லட்சம் தீவுகள்), பின்லாந்து (1.98 லட்சம்), கனடா (52,455) உள்ளன.

இந்தியாவில் 1382 தீவுகள் உள்ளன. இதில் பெரும்பாலானவை அந்தமான், நிகோபர் தீவுகளில் உள்ளன.