கோடையில் எந்த தண்ணீர் ஆரோக்கியத்துக்கு சிறந்தது?
தற்போது அக்னி வெயில் தொடங்கி விட்டதால் வெப்பநிலை அதிகரித்துள்ளது.
வெயில் காலத்தில் உடலில் நீர்சத்தை பராமரிப்பதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.
எந்த ஒரு உணவும் உடலுக்குள் சென்றால், உடலின் வெப்பநிலையை அடைய வேண்டும்.
வெயிலில் அலைந்து விட்டு வீட்டுக்கு வந்ததும் உடனே குளிர்ந்த நீர், மென்பானம் அருந்துவது தவறு.
அது உடலின் வெப்பநிலையை அடைய, கலோரிகளை உடலில் இருந்து தான் எடுக்கிறது.
மென்பானங்களில் பழத்தின் சுவை, மணம், நிறம் இருக்கும். சத்துக்கள் குறைவு. எனவே சாதாரண தண்ணீரே நல்லது.