யாருக்கு மகிழ்ச்சி அதிகம்? ஆய்வில் தகவல்!
வாழ்க்கை மகிழ்ச்சி, திருப்தியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
இதற்கேற்ப பலரும் தங்களின் வாழ்க்கை பயணத்தை அமைக்க முயற்சிக்கின்றனர்.
இந்நிலையில், மகிழ்ச்சியாக உள்ளவர்கள் குறித்து பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலை ஆய்வு மேற்கொண்டது.
இதற்காக 76 நாடுகளை சேர்ந்த 80 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தியது.
பொறுமை, சவால்களை ஏற்பது, ஒருவருக்கொருவர் உதவுதல், பொதுநலன், நம்பிக்கை ஆகிய குணம் கொண்டவர்கள், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக, திருப்தியாக உள்ளதாக ஆய்வு தெரிவித்துள்ளது.
பிரிட்டன் மக்கள் 47 வயதில் தங்களின் உச்சபட்ச ஆரோக்கியம், மகிழ்ச்சியை அடைகின்றனர் என ஒரு ஆய்வு சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து இந்தாய்வு வெளியாகியுள்ளது.