முதியோர்களுக்கு அடிக்கடி வயிறு உப்பி சரிவர சாப்பிட முடியாதது ஏன்?
வயிறு அடிக்கடி உப்புவது போல் தெரிவது பல்வேறு காரணங்களாக இருக்கலாம்.
கோலிசிஸ்டேல் என்ற கல்லீரலில் பித்தநீர் சுரப்பு பிரச்னை, குடல் ஏறுதல் பிரச்னை, அல்சர் பிரச்னை ஆக இருக்கலாம்.
ஒருவேளை புற்றுநோய் ஆரம்ப அறிகுறியாக கூட இருக்கலாம்.
எனவே, உணவுப்பழக்க வழக்கத்தை சீர்படுத்தி கொள்ள வேண்டும்.
உடனடியாக மருத்துவரை அணுகி ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும். ஏனெனில் எந்த காரணத்தால் வயிறு வீங்குதல் பிரச்னை ஏற்படுகிறது என்பதை உறுதி செய்திட வேண்டும்.
டாக்டர் பரிந்துரை செய்யும் மருந்துகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.