புற்றுநோய் அறிகுறிகளை கண்காணிப்பது ஏன் அவசியம்?
புற்றுநோயை எந்த நிலையிலும் கட்டுப்படுத்த முடியும், குணப்படுத்த முடியும். அதன் நிலை அறிந்து அதற்கு ஏற்ற துல்லியமான சிகிச்சையை தர வசதிகள் உள்ளன என டாக்டர்கள் கூறுகின்றனர்.
ஆரம்ப கட்ட அறிகுறிகள் இருக்கும்பேதே மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு உரிய சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
புற்றுநோய்களில் வெவ்வேறு வகைகள் உள்ளன. உடலின் எந்த பகுதியில் புற்றுநோய் வந்தாலும் அதற்கான அறிகுறிகள் இருக்கும்.
ஒரு இடத்தில் கட்டி தோன்றுதல், பசியின்மை, எடை குறைதல், சளி, மலம், சிறுநீரில் ரத்தம் வெளியாகுதல், மலச்சிக்கல், நீண்ட நாள் காய்ச்சல் போன்றவை பொதுவான அறிகுறிகள்.
இந்த அறிகுறிகள் இருந்தால், ரத்தம், கட்டியின் திசுக்கள் உள்ளிட்டவைகளை பரிசோதனை செய்து புற்று நோய் உள்ளதா என்பதை உறுதி செய்யலாம்.
பரம்பரையாக மரபு வழியாக வரும் புற்றுநோய், புகையிலை பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோய் போன்ற காரணிகளை கண்டறிந்தால், அதற்கு ஏற்ற மருத்துவ சிகிச்சை பெறலாம்.
ஆரம்ப நிலை முதல் நான்கு நிலை வரை உள்ள புற்றுநோயை, மருந்து, அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை முறையை பயன்படுத்தி பயன்பெறலாம்.
கீமோதெரபி அல்லாத சிகிச்சைகளும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளன. கட்டி உள்ள இடத்தில் துல்லியமாக டார்கெட்டேட் சிகிச்சை அளித்தல், இம்யூனோ தெரபி சிகிச்சைகள் உள்ளன.