அடிக்கடி தும்மல் வருவதற்கான காரணமும் சிகிச்சை முறையும்!

மூக்கு துவாரத்தில் உள்ள மயிர் கால்களில் உணர்வு செல்கள் உள்ளன.

உடம்பிற்குள் கிருமி தொற்று அல்லது துாசி, சுவாசிக்கும் போது இயல்பாக தும்மல் மூலம் அவை வெளியேறுகின்றன.

பெரும்பாலும் மூக்கு துவாரத்தின் வழியாக நீர் உள் புகுந்து சைனஸ் எலும்பில் தங்கி விடும்போது சைனசைட்டிஸ் நோய் ஏற்படுகிறது.

ஆரம்ப நிலையிலேயே நீங்கள் டாக்டரை அணுகி, அவர் எழுதித் தரும் மாத்திரைகளை உட்கொண்டால் 5 அல்லது 7 நாட்களில் நோய் குணமாகிவிடும்.

குறிப்பாக மூக்கின் அடிப்பகுதியில் சளி கோர்த்து இருப்பதால் இதை ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்ய வேண்டும்.

மேலும் கவன குறைவால் சைனசைட்டிஸ் நோயை முற்ற விட்டால் பின்னர் ஆப்பரேஷன் செய்ய வேண்டியது வரும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.